கண்ணீர் மழையும் வெள்ள அவலமும் என இன்றைய நாட்களில் இலங்கை நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களை திருமலை, மட்டகளப்பு மக்கள் கண்ணீர் மல்க அனுஸ்டிதவண்ணம் உள்ளார்கள். இலங்கை வரலாற்றின் 50௦ வருட கால வரலாறுகளை எடுத்துப் பார்த்திருப்பின் சுனாமியே உலகுடன் சேர்த்து எம்மையும் உருக்குலைத்த ஒன்றாக இருந்தது இன்றுவரை அழியாத அடையாளமாக இருந்த சுனாமியையும் ஓரங்கட்ட வைக்கும் அளவிற்கு ஓயாத மழை வெள்ளம் மக்களினது அன்றாட வாழ்க்கையை மாற்றியமைக்கும் கொடிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இன்று வீடுகள் எங்கும் இறை புராணங்கள் ஒலித்துக்கொண்டு இருக்கின்ற வேளையில் இன்னமும் இறைஅருள் கிட்ட வில்லை என்பதே உண்மை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக