இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட்

அதிக ரன்கள் குவித்தவர்கள்

              உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் 33 ஆட்டங்களில் விளையாடி 1,732 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர் 4 சதங்கள், 12 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 152 ரன்கள் எடுத்துள்ளார்.
இவருக்கு அடுத்தபடியாக பாகிஸ்தானின் ஜாவித் மியான் தத் 33 ஆட்டங்களில் 1 சதம், 8 அரைசதங்களுடன் 1,083 ரன்கள் எடுத்துள்ளார். இவர் அதிகபட்சமாக 103 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கையின் அரவிந்த டி சில்வா 35 ஆட்டங்களில் விளையாடி 1,064 ரன்கள் குவித்து 3-வது இடத்தில் உள்ளார். இவர் 2 சதம், 6 அரைசதங்கள் அடித்துள்ளார். அதிகபட்சமாக 145 ரன்கள் எடுத்துள்ளார்.
மேற்கிந்தியத் தீவுகளின் விவியன் ரிச்சர்ட்ஸ் 1,013 ரன்களுடன் 4-வது இடத்தில் உள்ளார். அவர் 23 ஆட்டங்களில் 3 சதம், 5 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக 181 ரன்கள் எடுத்துள்ளார்.
5-வது இடத்தில் அவுஸ்திரேலியாவின் மார்க் வாஹ் உள்ளார். அவர் 22 ஆட்டங்களில் 4 சதம், 4 அரைசதங்களுடன் 1,004 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 130 ரன்கள் எடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 28 ஆட்டங்களில் 3 சதம், 2 அரைசதங்களுடன் 998 ரன்கள் குவித்து 6-வது இடத்தில் உள்ளார். இவர் அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 140 ரன்கள் எடுத்துள்ளார். இது 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அடிக்கப்பட்டதாகும்.
7-வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் வாஹ் உள்ளார். 33 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர் 1 சதம், 6 அரைசதங்களுடன் 978 ரன்கள் குவித்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 120 ரன்கள் எடுத்துள்ளார்.
இலங்கை வீரர் அர்ஜுன ரணதுங்கா 969 ரன்கள் குவித்து 8-வது இடத்தில் உள்ளார். 30 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 7 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 88 ரன்கள் எடுத்துள்ளார்.
9-வது இடத்தில் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாரா உள்ளார். 25 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 2 சதம், 6 அரைசதங்களுடன் 956 ரன்கள் குவித்துள்ளார். இவர் அதிகபட்சமாக 116 ரன்கள் எடுத்துள்ளார்.
பாகிஸ்தான் வீரர் சயீத் அன்வர் 915 ரன்களுடன் 10-வது இடத்தில் உள்ளார். 21 ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 3 சதம், 3 அரைசதங்களுடன் இந்த ரன்னை எடுத்துள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 113 ரன்கள் எடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக